கொரோனா தடுப்பூசி பரிசோதனை : ரஷ்யாவில்14 சதவீத தன்னார்வலர்களுக்கு பக்கவிளைவு

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செய்த பரிசோதனையில், 14 சதவீத நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா :

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அறிவித்தது. ”ஸ்புட்னிக்- V’ என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை தனது மகளுக்கும் செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்தார். ரஷ்யாவின் தடுப்பூசி அறிவிப்புக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆரம்பக்கால பரிசோதனை கட்டத்திலேயே அதிகாரப்பூர்வ அனுமதி அளிப்பது ஆபத்தானது என எச்சரித்தனர்.

இந்த நிலையில் ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி பெறப்பட்ட தன்னார்வலர்களில் 14 சதவீத நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் ஏழு பேரில் ஒருவருக்கும் தசை வலி, சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டது.இதை கணித்த மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியால் தான் இந்த பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனர், இந்த அறிகுறிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் சரியாகி விடுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

40,000 தன்னார்வலர்களை வைத்து இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக ரஷ்யா கூறியிருந்தது. அதில் முதல்கட்டமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களுக்காக மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version