சவுதியில் சுற்றுலா விசா மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளையொட்டி, சவுதி அரேபியா சுற்றுலா விசாவை (வருகை விசா) மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. சவுதி உட்பட பல நாடுகளில் இந்தியர்கள் பணிபுரிகின்றர். கொரோனா பாதிப்பு காரணமாக அவ்வப்போது விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிப்பு காரணமாக பல நாடுகளும் தங்களது மாநில மற்றும் பிற எல்லைகளையும் மூடியது. வேலை மட்டுமின்றி, பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காகவும் சுற்றுலா விசாவை பயன்படுத்தப்படுகிறது. சவுதியிலும் மார்ச் முதல் விமான நிலையம் மூடப்பட்டது.

இதனால் சுற்றுலா விசாவில் சவூதிக்கு சென்றவர்கள் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காலவதியான விசாக்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. தற்போது நாட்டிற்குள் வருபவர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி சுற்றுலா விசா (Visit Visa) தானாக நீட்டிக்கப்படும் என்று சவுதி பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி, அவை தேசிய தகவல் மையத்துடன் இணைந்து 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

இதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலம் அங்கு சென்றவர்கள் கூடுதலாக மூன்று மாதம் சவூதியில் தங்கி கொள்ளலாம். தொற்று நோயால் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சவுதியின் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவே, மன்னர் சல்மான், தொடர்ச்சியான முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், சவூதி அரேபியா வெளிநாட்டு விசாக்கள் மற்றும் தங்குவதற்கான அனுமதிகளை மூன்று மாதங்களுக்கு இலவசமாக நீட்டிப்பதாக அறிவித்தது.

Exit mobile version