ஸ்மார்ட் மாஸ்க்குகள்!!!ஜப்பான் அசத்தல்!!!

ஜப்பானிய ரோபோ ஸ்டார்ட்அப்பின் ஸ்மார்ட் மாஸ்க் சி-மாஸ்க் ஒரு தொழில்நுட்ப முகமூடியை வெளியிட்டுள்ளது, இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும், தொலைதூர அழைப்புகளை மேற்கொள்ளவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை ரோபோட்டிக்ஸ் நிறுவத்தின் தலைமை நிர்வாகி தைசுத் ஓனோ தெரிவித்துள்ளார்.

இந்த வகை மாஸ்க்குகள் வெள்ளை நிற சிலிக்கானால் செய்யப்பட்டுள்ளது.இவ்வகை மாஸ்க்குகளை சுவாசிக்க பயன்படுத்த முடியாது.எனவே வழக்கமாக அணியும் மாஸ்க்குகளுக்கு மேல் அணியக் கூடிய வகையில் இந்த் மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ்க்கில் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வகை மாஸ்க்கை பயன்படுத்தி ஜப்பான் மொழியிலிருந்து சீன,கொரிய,வியட்நாமியம்,ஸ்பானிஸ்,பிரெஞ்சு என 8 மொழிகளில் பேசலாம்.

தற்போதைய நிலையில் ஒலி மற்றும் எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.எதிர்காலத்தில் வி,ஆர்.மற்றும் ஏ.ஆர் பட அமைப்புகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.

டிஜிட்டல் உலகின் புதிய தகவல் தொடர்பு சாதனம்.40 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்ட இவ்வகை மாஸ்க்குகள் செப்டம்பர் முதல் விற்பனைக்கு வரும்.

Exit mobile version