எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.

இலங்கை:

எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை சிறைபிடித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் சுற்றிவளைத்து,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் ,பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது.

Read more – பும்ரா, அஸ்வின் பௌலிங்கில் அசத்தல் : இந்திய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா அணி

இந்தநிலையில், இலங்கை பருத்தித்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலந்துரையாடியபோது சர்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து கொண்டு வாருங்கள். இல்லையென்றால் படகுகளின் எண்களையாவது கொண்டு வாருங்கள்.அந்த இந்திய மீனவர்களின் படகுகளை என்னிடம் ஒப்படையுங்கள்.அப்பொழுது வரும் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

Exit mobile version