ரஷ்ய நாட்டின் வீதியில் திரியும் நீல வண்ண நாய்கள்

ரஷ்ய நாட்டின் வீதிகளில் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தெரு நாய்கள் திரிந்து வருகின்றனர்.

ரஷ்யா :

ரஷ்ய நாட்டில் தெரு நாய்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும் ஒரு சில தெரு நாய்கள் பச்சை நிறத்துடன் சுற்றி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. முதலில் கடந்த பிப்ரவரி 11 ம் தேதி முதல் சுமார் ஏழு தெரு நாய்கள் நீல நிறத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது. அது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வந்தது.

இந்தநிலையில், அந்நாட்டின் தலைநகர் மாஸ்க்கோவிலிருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Nizhny Novgorod என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகமாக காணப்பட்டது. கண்ணாடி தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய கழிவு நீரில் நாய்கள் புரண்டதால் நிறம் மாறியதாக கூறப்படுகிறது. நீல நிற தோலாக மாறியுள்ள நாய்கள் அனைத்தும் நலமுடன் இருப்பதாகவும், உணவு சாப்பிடுவதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more – காதலிக்க மறுத்ததால் 2 சிறுமிகள் கொலை

ஒரு சிலர் மாஸ்க்கோவில் உள்ள பெயிண்ட் சேமிப்புக்கிடங்கில் இருந்த பச்சை வண்ணமே காரணம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் இது விஷமிகளின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version