செல்ல பிராணிகளுக்கு செல்பி பூத்.. நாய்க்குட்டியின் அசத்தலான போஸ்

தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டிக்காக, பெண் இருவர் வடிவமைத்துள்ள செல்பி பூத் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

மனித வாழ்வில் இன்றியமையா இடத்தை பெற்றுள்ள நவீன பழக்கம் செல்பி. நிகழ்ச்சிகள், சுற்றுலா தளங்கள், உணவு என சூழல் எதுவானாலும் அங்கு செல்பி எடுப்பது என்பது மிகப்பிரபலமான செயலாக மாறியுள்ளது.

மனிதர்களை ஆட்கொண்டுள்ள இந்த பழக்கம், விலங்குகள் இடையேயும் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில், சுவீடனை சேர்ந்த பெண் ஒருவர் தனது நாய்க்குட்டிக்காக செல்பி பூத் ஒன்றை பிரத்யேகமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

யூடியூபராக உள்ள சிமோன் கியர்ட்ஸ், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் தனது யூடியூப் பக்கத்தில் 2.31 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் இவர் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவில், நாய்கள் தன்னை தானே படம் எடுத்துக் கொள்ள செல்ஃபி-பூத் ஒன்றை சிமோன் கியர்ட்ஸ் உருவாக்கியுள்ளார்.

அதில் நாய்கள் பூத்தின் உள்ளே சென்றவுடன் தனது கால்களை கொண்டு மிதித்தால் புகைப்படம் எடுக்கும் படி அவர் உருவாக்கியுள்ள வடிவமைப்பு பலரது கவனத்தை பெற்றுள்ளது. அந்த நாய்க்குட்டியின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version