அட இவ்ளோ நீளமான கால்களா?? கின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்…

அமெரிக்காவின் 17 வயது இளம் பெண் மேசி கர்ரீன், மிக நீண்ட கால்களை கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் செடார் பார்க் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மேசி கர்ரீன், 6 அடி 10 அங்குலம் உயரமுடையவர்.  மேசி-ன் இரண்டு கால்கள் மட்டுமே, 4 அடி நீளம் உள்ளன.

கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மேசியின் இடது கால் 135.267 சென்டி மீட்டர் நீளமும், அவரது வலது கால் 134.3 சென்டி மீட்டர் நீளமும் கொண்டுள்ளன.

மேசியின் மொத்த உயரத்தில், அவரது கால்கள் மட்டுமே 60 சதவீதம் அளவுக்கு உள்ளது ஆச்சரியத்தை ஊட்டுகிறது.

இந்தச் சாதனை பற்றி மேசி கர்ரீன் கூறும்பொழுது, நான் மற்ற அனைவரையும் விட மிகவும் உயரமாக இருப்பதால், என்னுடைய உயரத்தைக் குறித்து என்னை கிண்டல் செய்தனரே தவிர, என்னுடைய கால்களை குறித்து யாரும் கிண்டல் செய்யவில்லை. அதன்பின்னர் மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி நான் கவனிப்பதை நிறுத்தி விட்டேன். மக்களை கவனிப்பதை நான் நிறுத்தியவுடன், என்னை எதுவும் அவ்வளாக பாதிக்கவில்லை என்று கூறினார்.

லெகிங்ஸ் வாங்க கடைக்கு சென்ற இவருக்கு, அவரது உயரத்திற்கு சரியான லெகிங்ஸ் கிடைக்கவில்லை.  இதன் பின்னரே, தனது பெயரை கின்னஸ் உலக சாதனைக்கு பதிவு செய்துள்ளார்.

மேசி கர்ரீன், ரஷ்யாவைச் சேர்ந்த எகாடெரீனா லிசினா என்பவரின் சாதனையை முறியடித்து, தற்போது உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். லிசினா 6 அடி 8.77 அங்குலம் உயரமுடையவர். லிசினாவின் இடது கால் 132.8 சென்டி மீட்டர் நீளமும், அவரது வலது கால் 132.2 சென்டி மீட்டர் நீளமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version