ஆஃப்கானிஸ்தானின் குந்தூஸ் அருகே மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகும் கூட ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நின்றபாடில்லை. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வரும் நிலைமை உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டனர். இதே போல கடந்த மாதம் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இனறு ஆப்கானிஸ்தான் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்துள்ளாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்பில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் எனவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.