ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு :காபூல் துணை கவர்னர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை காரில் குண்டு வைத்து பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவருகிறது.தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசும்,தலீபான் பயங்கரவாத அமைப்பும் கடந்த செப்டம்பர் மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.அதனை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி தொடரும் நிலையில்,தலைநகர் பகுதியான காபூலில் நேற்று கோர தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபி நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் ரிமோட் காரின் இயக்கத்தின் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே மஹபூபுல்லா மொஹேபி உடல் சிதறி பலியானார்.மேலும் ஒரு பாதுகாவலரும் பலி,2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more-உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேச நாங்கள் தயார்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version