60 கிலோ நகைகளை அணிந்து வந்த மணப்பெண்… அப்போ தான் ஒரு ட்விஸ்ட்!!

சீனாவின் வருங்கால கணவர் பரிசாக கொடுத்த 60 கிலோ நகையையும் திருமணத்தன்று மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த காட்சி தான் தற்போது வைரல் செய்தி.

இந்திய திருமணங்களில் பெண்களுக்கு தங்க நகை பூட்டுவது தனி சடங்காகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், சீனாவில் மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த தங்கம் காண்போரை கிறுகிறுக்க வைத்துள்ளது.திருமணத்தன்று சுமார் 60 கிலோ தங்க நகைகளை அவர் அணிந்து வந்து, வருங்கால கணவரை கரம் பிடித்துள்ளார்.

என்ன 60 கிலோ தங்க நகைகளா? வாய்பிளக்க வேண்டாம். இது உண்மை தான். வருங்கால கணவர், தனது மனைவியின் மீது கொண்ட பிரியம் காரணமாக 60 கிலோ நகைகளை பரிசளித்துள்ளார். கணவரின் பிரியத்தை போற்றும் வகையில், திருமணத்தன்று அவர் கொடுத்த அனைத்து நகைகளையும் அணிந்து வந்து அவருக்கே சர்பிரைஸ் கொடுத்துள்ளார் மணப்பெண்.

இந்த சம்பவம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற அந்த திருமணத்தில் மணப்பெண் வெள்ளை நிற உடை அணிந்திருக்கிறார். கைகளில் பூச்செண்டு ஒன்றை பிடித்திருக்கும் அந்தப் மணப்பெண்ணின் கழுத்து முழுவதும் தங்க ஆபரணங்கள் பல்வேறு வடிவங்களில், ஆபரணமாக செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 60 கிலோ தங்கமும் ஒரு கிராம் கூட குறையாமல் கழுத்து முதல் இடுப்பு வரை தொங்கவிடப்பட்டிருந்தது.

பெண்ணால் நடக்க கூட முடியவில்லையாம். இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இருவரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மணமகளுக்கு சீதனமாக சுமார் 60 நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள் என பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பெரும்பான்மையான நகரங்களில் பெண்களுக்கு சீதனம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version