ஐரோப்பிய நாட்டில் நகரம் முழுவதும் பிளேட் மழை : பீதியில் உறைந்த மக்கள்

ஐரோப்பிய நாட்டில் நகரம் முழுவதும் பிளேட் மழை கண்டு பீதியில் உறைந்த மக்கள் விமான போக்குவரத்து துறை விசாரணை தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள  மீரஸ்ஸென்  நகரம் முழுவதும் பிளேட் மழை கொட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து மீரஸ்ஸென் நகரின் தீயணைப்புத் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது மீரஸ்ஸென் நகரின் வான்வெளியில் விமானம் ஒன்று தீ பற்றி எழுத வந்ததை கண்டு நகர மக்கள் பீதியில் உறைந்தனர்.

விமானத்தின் என்ஜினில் உள்ள பிளேட்டுகள் நகரம் முழுவதும் விழுந்து இதில் வயதான பெண் ஒருவர் காயமடைந்ததாக தகவல் தெரிவித்துள்ளார் மாஸ்ட்ரிச்ட் ஆச்சென் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட லோங்க்டில் அவிட்டின்  அன்புக்கு சொந்தமான சரக்கு விமானமே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. விமானம் திசை திருப்பப்பட்டு பெல்ஜியத்தில் உள்ள லீக்கேஜ்ல்  பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான பாகங்கள் விழுந்ததில் மீரஸ்ஸென் நகரில் பல கார்கள் சேதம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சேதங்கள் குறித்து அறிய வேண்டும் என்பதால் மக்கள் பாகங்களை தொட வேண்டாம் என வலியுறுத்துகின்றனர். லீக்கேஜ்க்கு புதிய இன்ஜின் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் விமானம் நியூயார்க்கான பயணத்தை தொடரும் என லோங்க்டில் அவிட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்படும் போது இறக்கை எதிலாவது சிக்கியதால் அல்லது பறவைகள் மோதியதால் இஞ்சின் சேதமடைந்து தீப்பற்றி இருக்கலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து நெதர்லாந்து விமான போக்குவரத்து துறை விசாரணை தொடங்கியுள்ளது.

Exit mobile version