சுறாவிடம் சண்டையிட்டு மனைவியை காப்பாற்றிய கணவன்

ஆஸ்திரேலியா நியூ சவூத் வேல்ஸ்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி கடற்கரையில் நடந்து சென்ற டாய்ல்-ஷெல்லி தம்பதியினரை சுறா மீன் தாக்கியது.சுறாவிடம் சண்டையிட்ட கணவன் மனைவி டாய்லை காப்பாற்றினார்.

35 வயதான டாய்ல்-ஷெல்லி தம்பதியினர் போர்ட் மேக்வாரி கடற்கரையில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போது 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறா மீன் டாய்லை தாக்கியது.உடனே டாய்லின் கணவர் சுறா மீது குதித்து சண்டையிட்டு மனைவியை காப்பாற்றினார்.

அங்கு வந்த மருத்துவர்கள் டாய்லுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.அவருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன,பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்திற்கு பிறகு போர்ட் மேக்வாரி கடற்கரை மூடப்படுவதாக அரசு அறிவித்தது.சுறாவிடம் போராடி மனைவியை காப்பாற்றிய கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Exit mobile version