சீன நடிகை ஒருவர் தனது முகத்தின் அழகை மேலும் அழகு படுத்துவதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தில் முடிந்துள்ளது.
சீனா :
சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை காவ் லியூ. இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பு கிடைக்காததால் தனது முக அழகை மேலும் வசீகரமாக மாற்றும் முயற்சியில் அக்டோபர் மாத இறுதியில் தனது மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
இந்த அறுவை சிகிச்சையின் பிரதிபலனாக அவருக்கு படவாய்ப்பு அமையும் என்று எதிர்பார்த்தால் அவரது மூக்கில் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு 61 நாட்கள் மருத்துவமனையில் தங்கி, மறு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதற்காக இவர் கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
அதன்பிறகும் கூட காவ் லியூ முகம் பழைய நிலைக்கு திரும்பாமல் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூக்கின் நுனியில் கருப்பாக மாற தொடங்கியது. இதுகுறித்து காவ் லியூ அவரின் அந்த புகைப்படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டு கூறியதாவது :
நான்கு மணி நேர அறுவை சிகிச்சை என்னை மிகவும் அழகாக மாற்றும் என்று முழுதாக நம்பினேன். ஆனால், அது மோசமான கனவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், அவர் இது போன்று யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர் மற்றும் ரசிகைகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.