வீட்டை காலி செய்வதற்கு பயந்து தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்த மகள் : மிரண்டு போன அக்கபக்கத்தினர்

ஜப்பானில் 10 ஆண்டுகளாக மகள் ஒருவர் தாயின் சடலத்தை குளிர் சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ :

டோக்கியோ நகரில் அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் 48 வயதான யூமி யோஷினோ என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தான் தங்கியிருந்த வீட்டிற்கு முறையாக வாடகை தரவில்லை என்று குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.

யூமி யோஷினோ வசித்து வந்த அந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அப்பொழுது குளிர் சாதன பெட்டி ஒன்று இயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதைக்கண்ட அந்த பணியாளர் அந்த பெட்டியில் என்ன உள்ளது என்று பார்த்தபோது அதில் உறைந்துபோன நிலையில் மனித சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Read more – ஆதரவில்லாத முதியவர்களை சாலையில் வீசிய அவலம் : போலீசில் புகார் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஃப்ரீசரில் இருந்த சடலம் யூமி யோஷினோவின் தாயார் என்றும், அவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடானது, அவர் இறந்துவிட்டதால் பிளாட்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை குளிர் சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்ததாக யூமி யோஷினோ தெரிவித்துள்ளார்.

மேலும், யூமி யோஷினோ தயார் இறந்து 10 ஆண்டுகள் ஆனதால் அவர் ஏற்படின் இறந்தார் என்பது குறித்து கண்டறிய முடியவில்லை என்றும், அவர் இறந்தபோது அவருக்கு 60 வயது இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version