இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து கணவர் தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல். இவருடைய மனைவி சேம்ரா ஐசல். ஹகான் கடந்த 2018-ஆம் ஆண்டு 7 மாத கர்ப்பிணியான சேம்ராவை முக்லா நகரத்தில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குள்ள உயரமான மலைக்கு அழைத்துச்சென்று ரொமான்டிக்காக செல்ஃபி எடுத்திருக்கிறார்.
ஆனால் அதன்பிற்கு சேம்ரா திடீரென கால்தவறி மலை உச்சியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஹகான் 7 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு விட்டு கால்தவறி விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்திருக்கிறது. மேலும் இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் ஹகான் இந்த கொலையை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.