வெங்கடேச பெருமாள் வேடத்தில் நித்தியானந்தா இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா தற்போது ஆஸ்திரேலியா நாட்டை தாண்டி ஒரு தீவில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. மேலும், அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் நித்தியானந்தாஇப்பொழுது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
Read more – கிரிஜா வைத்தியநாதன் நியமன வழக்கு.. தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..
கையில் சங்கு மற்றும் சக்கரத்தை வைத்து கொண்டு உடல் முழுவதும் தங்க நகைகளுடனும், தலையில் கீரிடம் கொண்டு பெருமாள் வேடம் தரித்த புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பக்தர்கள் அனைவரும் கைலாசா நாட்டுக்கு வர வேண்டும். அங்கு வருவதற்கான இலவச இ – பாஸ் சேவை இணைய பக்கத்தில் இருப்பதாகவும், உலகின் ஒரே இந்து நடன கைலசாவை ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நித்தியின் இந்த காட்சிக்கு லீலைக்கு பெருமாள் பக்தர்கள் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவிக்க, மறுபுறம் நெட்டிசன்கள் நித்தியானந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.