இறுதி சடங்கு செய்யப்பட்ட கணவன் : 4 நாட்களுக்கு பிறகு உயிரோடு வந்ததால் மனைவி அதிர்ச்சி

இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 4 நாட்கள் பிறகு உயிருடன் கணவர் வந்ததால் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டெகுசிகல்பா:

கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த ஒருவரை தன் கணவர் என்று எண்ணி ஒரு பெண் அடக்கம் செய்துள்ளார். ஆனால், தற்போது உயிரிழந்த அந்த நபர் 4 நாட்களுக்கு உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜூலியோ மற்றும் விக்டோரியா. வழக்கம்போல் காலை பொழுதில் ஜூலியோ நடைபயணம் மேற்கொண்ட பொழுது திரினிடேட் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் இவரை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

Read more – இன்றைய ராசிபலன் 10.01.2021!!!

இதையடுத்து, வெகுநேரம் ஆகியும் தன் கணவர் வீடு வராத நிலையில் விக்டோரியா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 30 ம் தேதி கார்மென் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து விக்டோரியாவிற்கு அழைப்பு வந்துள்ளது.அதில், உங்கள் கணவர் போன்ற ஒரு முதியவர் கொரோனா காரணமாக மரணித்துவிட்டதாகவும் அவரை அடையாளம் கண்டு எடுத்துச்செல்லவும் கோரிக்கை வைத்துள்ளனர். விக்டோரியா மருத்துவமனைக்கு சென்று தவறுதலாக வேறு ஒருவரை தன் கணவன் என்று அடையாளம் காட்டி இறுதி சடங்குகளை செய்துள்ளார்.

தற்போது, காட்டுப்பகுதியில் மயக்கம் அடைந்த ஜூலியோவை அவ்வழியாக சென்ற சிலர் கண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஓரளவு சுயநினைவு திரும்பிய ஜூலியோ தன் வீட்டை அடையாளம் கண்டு சென்றபொழுது விக்டோரியா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு மருத்துவ ஊழியர்கள் ஜூலியோவின் நிலைமை குறித்து அவரது மனைவிக்கு விளக்கமளிக்க நிலைமையை புரிந்து கொண்டு தன் கணவரை கண்ணீர் மல்க வரவேற்றார். தற்போது இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பரவி வைரலாகி வருகிறது.

Exit mobile version