ஜெர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மன் :
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. வழக்கம்போல் அங்கு பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு விதிகளும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று மாலை 5.16 மணிக்கு விமானநிலையத்தில் பெட்டியுடன் ஒரு நபர் வந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் அந்த நபர் வந்தநிலையில், அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணிந்து வர கூறியுள்ளனர். கோவமான அந்த நபர் காவல் துறையினரை நோக்கி “நான் உன்னை கொன்றுவிடுவேன், கடவுளே சிறந்தவன் ” என்று கூறிக்கொண்டு கையில் இருந்த பெட்டியை அங்கையே வைத்துவிட்டு ஓட்டம் பிடித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 17.01.2021!!!
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் துப்பாக்கி முனையில் அந்த நபரை சுற்றிவளைத்து அவர் கொண்டுவந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.மேலும், விமான நிலையத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தால் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விமான போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.