வித்தியாசமான முறையில் கௌரவித்த நாடு, வியப்பில் திகைத்து போன பெண், காரணம் இதுதான்

ரஷ்யாவை சேர்ந்த அன்னா கிகினா என்ற பெண் அடுத்த ஆண்டு விண்வெளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். 36 வயதான அவர் விண்வெளிக்கு பயணம் செய்யும் 4வது பெண் மற்றும் 58 ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணில் பறக்கப்போகும் ரஷ்ய பெண்மணியாகவும் இருக்கிறார்.

அவருடைய சாகசப்பயணம் மற்றும் திறமையை கௌரவப்படுத்தும் விதமாக அந்த நாட்டை சேர்ந்த டாய் நிறுவனம் ஒன்று அவர் விண்வெளி பயணம் செய்வது போல ஒரு பார்பி டால் வடிவமைத்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய விண்வெளி நிறுவனம் கிகினாவின் வாழ்க்கை பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.

ஒரு விளையாட்டு சிறுமி விண்வெளி பொறியாளராக வளர்ந்து நாட்டுக்காக துணிச்சலான சவாலை எதிர்கொள்ள போகிறார். அவருடைய பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது

புதுமை பெண்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஒரு முயற்சியாக இதை டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பார்பி பொம்மையுடன் ஆனந்தமாக போஸ் கொடுத்துள்ள கிகினா தான் குழந்தையாக இருக்கும் போது விண்வெளிக்கு போவதை பற்றி கனவு கூட கண்டதில்லை என்றும் இப்போது இந்த தருணத்தில் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் விண்வெளிக்கு பறக்கப்போகும் நாளை எண்ணி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டின் முற்பகுதியில் கிகினா விண்வெளியில் பறக்கவுள்ளார்.

Exit mobile version