அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த டிக்டாக் நிறுவனம்!!

அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் சீன நிறுவனம் ஆன டிக்டாக் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பல புகார்களை தெரிவித்துக் கொண்டே இருந்தார். இதனால் டிக் டாக் நிறுவனம்  தங்களை தடை செய்யும் நோக்கில் புகார் தெரிவித்த  டிரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் டிக்டாக் பயன்படுத்தபவர்களாக இருக்கிறார்கள் என்றும், எங்களை திடீரென்று அமெரிக்காவின் கருவூலத்திற்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி ட்ரம்பின் அதிகாரிகள்  கட்டாயப் படுத்துகிறார்கள் என்றும், இது மட்டுமில்லாமல் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றெல்லாம்  எங்கள் மீது புகார் செய்துள்ளார்கள். மேலும், நாங்கள் அமெரிக்காவை  டிக் டாக் மூலமாக    உளவு பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் எங்கள் மீது  சுமத்தி உள்ளார்கள். இதன் மூலம் எங்களை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார் டிரம்ப் என  டிக் டாக்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் டிக்டாக்கால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்  என டிரம்ப் கூறி வரும் கதைகளை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.சீன அரசுக்கும்  டிக் டாக்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும், இது சம்பந்தமான பல ஆதாரங்களை நாங்கள் ட்ரம்ப் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தோம். ஆனால், அமெரிக்க அரசு அரசியல் நோக்கத்தின் காரணமாக எங்கள் பேரில் தவறான புகார் கூறி வருகிறது. மேலும், இதன் ஆப்பின் தரவுகளை நாங்கள் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும்   சேகரிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளோம்.  இதனை, பலமுறை அவரிடம் தெரிவித்தும் எங்களை நிராகரித்து எங்கள் நிறுவனத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் நாங்கள் வழக்கு தொடர வேண்டியுள்ளது என்று டிக் டாக் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தார்கள். 

Exit mobile version