டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தபட்ட ரேடியோவை மீட்க உத்தரவு!!!

“மூழ்கா கப்பல்” என்று வர்ணிக்கபட்ட டைட்டானிக் கப்பல் 1500 பயணிகளுடன் தனது முதல் பயணத்திலேயே 1912 ம் ஆண்டு மூழ்கி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நூறாண்டுகள் கடந்தும் ஏதேனும் ஒரு வகையில் அது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தான், இன்று ஒரு தீர்ப்பு வெளியாகி டைட்டானிக் நினைவலைகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் பாகங்களை பிரித்தெடுப்பதற்க்கு தடை விதிக்கபட்டது.

அந்த தடையை நீக்கி, டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தபட்ட ரேடியோவை மீட்டெடுக்க ஜூலை 10 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வட-அட்லான்டிக் கடலில் மூழ்கியுள்ள அந்த கப்பலின் நிலை மோசமாகி வருவதால் பாரம்பரியமான அந்த ரேடியோவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version