அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடந்த புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே தனது உதவியாளருக்கும் தனக்கும் கொரோனா இருப்பதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறி உள்ளார்.
டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் ‘சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், மற்றும் எனக்கும் கொரோனா நோய் தொற்று உள்ளது என்றும் தன்னை தனிமை படித்திக்கொண்டதாக பதிவிட்டுள்ளார் .