இன்னும் 4 ஆண்டுகளில் உங்கள் முன்னால் மீண்டும் வருவேன் : கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் நடந்த அதிபர் தோல்வியை தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் :

அமெரிக்காவில் கொரோனா பரவல் தொற்றுக்கு மத்தியில் கடந்த மாதம் 3 ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது.அந்த தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். டிரம்ப் இன்றுவரை தான் தோல்வியடைந்ததை ஏற்கமறுத்து வந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில்,அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த கொண்டாட்டத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடியரசு கட்சியினர் கலந்து கொண்டனர்.அப்பொழுது பேசிய டிரம்ப்,இந்த 4 ஆண்டுகள் எனக்கு மிக ஆச்சரியமானவையாக அமைந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்கவே முயற்சி செய்கிறோம். ஆனால் அது தற்போது நடப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. இன்னும் 4 ஆண்டுகளில் நான் உங்கள் முன்னால் மீண்டும் வருவேன் என்று 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version