பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கொரோசி பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அமைதி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பெரிய பொறுப்புகளை கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய உறுப்பினர்கள், பாதுகாப்பு கவுன்சிலின் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கு தேவையாக உள்ளன என்றார். அவற்றில் உலக மக்களின் வசதிக்காக பங்காற்றுவோம் என நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கும் அடங்கும் என கூறியுள்ளார்.இதுபோக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்ட கடந்த காலத்தில், பெரிய நாடுகளில் ஒரு பகுதியாக இந்தியா இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வழி வகுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். சீர்திருத்தத்திற்கு தேவையான ஆற்றல்மிக்க முதல் விவாதம் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் கூடுதலாகி இருக்கிறது. அதற்கு பேச்சுவார்த்தைக்கான நடைமுறை 13 ஆண்டுகளாக, மிக நீண்ட காலம் நடந்து வருகிறது. எனினும், அது உறுப்பினர் நாடுகளின் கைகளில் உள்ளது என்று உரைத்தார் அவர்.

Exit mobile version