வெற்றி முகத்தில் ஜோ பைடன்… தீர்ப்புகளை நம்பி டிரம்ப்…

இந்த கொரோனா பாதிப்பு சூழ்நிலையிலும் உலகமே உற்று நோக்கும் ஒரு தேர்தல் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல் தான், கடந்த 3-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

அதிபராக 270 வாக்குகள் என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். ஜோ பைடனுக்கு 50.5 சதவீத வாக்குகளும் டிரம்பிற்கு 47.8 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய 4 மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.

ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார். ஜார்ஜியா மாநில அரசு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், நவேடா மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் முன்னிலையில் இருந்து வருவதன் மூலம் வெற்றி கனியை பறிக்கும் இடத்தில் மிகவும் அருகில் வந்துள்ளார் ஜோ பைடன்.

Exit mobile version