அடம் பிடிக்கும் டிரம்ப்…அடுத்த கட்ட வேளைகளில் பைடன் குழு… உச்ச கட்ட பரபரப்பில் அமெரிக்கா…

இந்த கொரோனா நோய் பரவல் சூழ்நிலையிலும் உலக மக்கள் ஆவலுடன் உற்று நோக்கிய விஷயம் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல்தான்.

இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 290 வாக்குகள் வெற்றி பெற்ற நிலையில் தேர்தலில் மோசடி நடந்ததாக தொடர்ந்து டிரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிபர் டிரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.ஆனால் தனது தோல்வியை ஒத்து கொள்ளாத டிரம்ப் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளிவரும் என்றும் நாங்கள் அமெரிக்காவை சிறப்பாக உருவாக்குவோம். நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version