“சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்கும்”‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ – ட்ரம்ப் அதிரடி கருத்து

சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான ட்ரம்ப் தற்போதைய அதிபர் பைடனை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பைடன் அரசு மிகவும் பலவீனமாகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகவும் அதை சீனா சற்றும் மதிப்பதில்லை என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இறுதியாக சீனாவுடன் போர் தொடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா வரும் என்றும் ட்ரம்ப் யூகம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் ட்ரம்ப்பின் கருத்து வெளியாகியுள்ளது. தைவானில் சீன விமானப்படை போர் பயிற்சி மேற்கொண்டது பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முன்னதாக சீனா – அமெரிக்கா இடையே கடும் வர்த்தக மோதலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version