“நல்ல மனிதரை இழந்துவிட்டோம்”, பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” என பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்!

டெல்லி ராணுவ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜி நேற்று இரவு காலமானர். அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் அஞ்சலியினை தொடர்ந்து டெல்லியில் உள்ள லோதி மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

84 வயதான இவர் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவராக பதவி வகித்த போது அனைத்து தரப்பட்ட மக்களிடம் நல்ல மதிப்பினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய மறைவு என்பது அனைவரிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 7 நாட்களுக்கு துக்க அனுசரிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அமெரிக்கா இரங்கல்

முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் மறைவு தொடர்பாக அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு எங்களின் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேம் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய வாரலாற்றில் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவரின் இழப்பால் வருந்தத்தில் உள்ள இந்திய மக்களுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்’ எனவும் அமெரிக்க தெரிவித்துள்ளது. இதோடு அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து வந்த மனிதர்களுள் ஒருவரான பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர் , அரசியல் கட்சியினர் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமான செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் இந்தியா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. பிரணாப் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தினார். ஒரு அறிஞருக்கு சமமானவர், ஒரு உயர்ந்த அரசியல்வாதி, அவரின் அரசியல் ஆளுமை மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், மிகவும் துயரத்துடன் துரதிருஷ்டவசமாக பிரணாப் முகர்ஜி காலமான செய்தி தேசத்துக்கு வந்துள்ளது. அவரது மறைவுக்கு நாட்டு மக்களுடன் சேர்த்து நானும் எனது மரியாதையை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு தலைவர்கள் இரங்கல்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது இரங்கல் செய்தி குறிப்பில், நேபாளம் சிறந்த நண்பரை இழந்து விட்டதாகவும், பொதுவாழ்வில் பல்வேறு நிலைகளில் இருந்த அவர் இந்தியா – நேபாளம் இடையிலான உறவு வலுப்பெற வழங்கிய பங்களிப்பை நேபாளம் எப்போதும் நினைவுகூர்கிறது என தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சை தெரிவிக்கையில், சிறந்த அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் அனைவராலும் விரும்பப்பட்ட மனிதர் தான் பிரணாப் எனவும், தனது தேசத்திற்கு அவர் ஆர்வத்துடன் ஆற்றிய பணி, ஈடு இணையற்றது என கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version