ஏலத்துக்கு வரும் உலகின் மிகப்பெரிய வைரக் கல்- ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

rock diamond
the rock diamond

உலகின் மிகப்பெரியதாக கருதப்படும் வைரல் கல் ஒன்று ஏலம் விட முடிவு செய்துள்ளதை அடுத்து, தற்போது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தென் ஆஃப்ரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வைரக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதற்கு ‘தி ராக் (பாறை) என்று பெயர்வைக்கப்பட்டது. துபாயிலுள்ள கிறிஸ்டி என்ற நிறுவனத்திடம் இந்த வைரக் கல் உள்ளது.

வரும் மே மாதம் ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்படும் இந்த கல், அங்கு ஏலம் விடப்பட முடிவு செய்துள்ளது. அதனால் துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வைரக் கல்லை பலரும் பார்த்து செல்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய வைரக் கல்லாக கருதப்படும் இது, ஏலம் விடப்படும் போது இந்திய மதிப்பில் ரூ. 228 கோடிக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் பலவும் வைரக் கல்லின் விலையை தெரிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளன.

Exit mobile version