உலக மக்கள் திண்டாட்டம்..கொரோனா வைரஸை பரப்பிய சீனர்கள் கும்மாளம்..

கொரோனா வைரஸ் உருவானதாக கூறப்படும் ஊகான் நகரில், பொதுமக்கள் உற்சாகமாக கூடி நீச்சல் குள விருந்து கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

கடந்த ஆண்டு இறுதி முதல் உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன் காரணமாக அதிபர் ட்ரம்ப் இந்த வைரஸை, ஊகான் வைரஸ் என்றே அழைத்து வருகிறார்.

இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக  அதிகரித்துள்ளது.  அதில், அமெரிக்காவில் 1.76. லட்சம் பெரும், பிரேசிலில் 1.11 லட்சம் பெரும், இந்தியாவில் 53 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 15,989 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.  

உயிரிழப்புகள் மட்டுமின்றி கொரோனா ஊரடங்கால் பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்து, பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பி விட்டு ஊகான மக்கள் எந்த தடையும் நள்ளிரவில் நகரில் விருந்து நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஊகான் நகரில் நடந்த நீச்சல் குள விருந்து படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது . கொரோனா பரவுவது குறித்த கவலைகளுக்கு மத்தியில், சீனாவின் உகான் நகரத்தின் பூங்கா ஒன்றில் அதிக அளவில் 
சீனர்கள் நிரம்பிய நீச்சல் குள விருந்தின் புகைபடங்கள் வைரலாகியது.

இதையடுத்து சீன அரசு செய்தித்தாள்கள் இந்த 
படங்களை தங்களது முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன . அவை நகரில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகையே புரட்டிப் போட்டு விட்டு, தங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனும் வகையில் சீனர்கள் செயல்படுவது பல தரப்பு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version