சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காலநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருகிறது.மருத்துவமனையில் தினமும் குறைந்தபட்சம் 50 பேர் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த மெட்ராஸ் ஐ.
அறிகுறிகள்:
*கண் எரிச்சல்
*விழிப்பகுதி சிவந்து போதல்
*நீர் சுரந்து கொண்டே இருத்தல்
*இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை
பரவும் விதம்:
இது காற்று மூலமாகவும், மாசு காரணமாகவும் பரவுகிறது. மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்களின் கைக்குட்டையை பயன்படுத்துதல். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் ஏசி அறையில் இருந்தால் இது விரைவாக பரவும்.
தடுக்கும் முறை:
கண்டறிந்தவுடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.
மெட்ராஸ் ஐ இருந்தால் தனி அறையில் இருக்க வேண்டும்.
தனியாக டவல்,சோப், கைக்குட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
மெட்ராஸ் ஐ பாதிப்பு வந்தவர்களின் கண்ணை பார்க்காமல் இருப்பது நல்லது.
-பா.ஈ.பரசுராமன்.
