BS6 அப்டேட்டில் Benelli நிறுவன பைக் ..இந்தியாவில் 7 மாடல்களில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு

Benelli இந்தியா நிறுவனம் 7 BS6 பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளது.

பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் BS6 தரச் சான்றுடன் புதிய வாகனங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், BS6 அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ள benelli பைக் நிறுவனம் 7 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி, benelli TRK 502, TRK 502X, லியோன்சினோ 500, benelli 302S, benelli 302R, benelli லியோன்சினோ 250, benelli TNT 600I என ஏழு பைகளை BS6 தரச் சான்றுடன் வழங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

BS6 அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் வெளியீட்டு தேதி பற்றி பெனலி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய மேம்படுத்தப்பட்ட பைக்குகளின் விலை BS4 வெர்ஷன்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக benelli நிறுவனம் தனது இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை BS6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. இதன் விலை BS4 மாடலை காட்டிலும் ரூ. 20 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்சமயம் BS6 அப்டேட் பெற்ற benelli நிறுவனத்தின் ஒரே பைக்காக இம்பீரியல் 400 இருக்கிறது.

புதிய benelli இம்பீரியல் 400 BS6 மாடல் விலை ரூ. 1.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாடலின் விநியோகமும் துவங்கப்பட்டுள்ளது.

BS6 மாடலில் 374சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 29Nm டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Exit mobile version