இரண்டு கேடிஎம் பைக் மாடல்களின் விலையில் மாற்றம்.. வாடிக்கையாளர்கள் ஷாக்

கேடிஎம் நிறுவனத்தின் இரண்டு பைக் மாடல்களின் விலை, திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல நிறுவனங்களும், அடுத்தடுத்து விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது பைக் மாடல்களின் விலையை மாற்றியமைத்தது. அதன்படி, கேடிஎம் 390 டியூக் மாடல் விலை ரூ. 8515 வரை உயர்த்தப்பட்டது

தற்போது, ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 பைக் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலை உயர்வின் படி, கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 3,537 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2,56,917 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கேடிஎம் ஆர்சி 125 மாடல் விலை ரூ. 1,280 அதிகரித்து, ரூ. 1,61,101 என உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கேடிஎம் ஆர்சி 125 மாடலில் 125சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஆர்சி மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.

Exit mobile version