பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரு புதிய பைக் மாடல்களுக்கான் முன்பதிவு தொடங்கியது..

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ரக பைக்குகளுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் BS6 தர சான்றுடன் கூடிய புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ரக பைக்குகளுக்கான் முன்பதிவு இந்திய சந்தையில் தொடங்கி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் அல்லது விற்பனை மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ள இந்த பைக் மாடல்களுக்கான ஆரம்ப விலை 3 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளை டெல்லி, மும்பை, புனே, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, ஐதராபாத், இந்தூர், லக்னோ, சண்டிகர், ஜெய்பூர், ராய்பூர், கட்டாக் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்ய முடியும். 

இந்திய சந்தையில் BS4 வகையை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாட அதிகளவு விற்பனையாகி வந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இரு மாடல்கள் மட்டும் 85 சதவீத பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய மாடல்களில் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version