பழைய கார்கள் வைத்திருப்பவரா?..உங்கள் காரை குப்பைக்கு அனுப்ப மத்திய அரசு தீவிரம்

பழைய கார்களை ஸ்கிராப் செயயும் திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகனங்களுக்கான BS4-ஐ கடந்து BS6 தரச்சான்று தற்போது படிப்படியாக கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் பழைய கார்களின் பயன்பாட்டை மொத்தமாக குறைப்பதற்கான நடவடிக்கையிலும், அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை முழுமையாக சாலைகளில் இருந்து அகற்றுவதற்கான திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. ஓரிரு மாதங்கள் அல்லது அதற்கு முன்னதாகவே வாகனங்களுக்கான ஸ்கிராப் தொகை முடிவு செய்யப்பட்டு, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதனால் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்கள் அகற்றப்படுவதோடு அதற்கு ஈடாக குறிப்பிட்ட தொகையை வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். இதனால் அந்த வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும் என, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version