புதுப்புது அம்சங்கள்.. டுகாட்டி மல்டிஸ்டிரா 950S.. வெளியீட்டு தேதி அறிவிப்பு

டுகாட்டி நிறுவனத்தின் புதிய மாடலான மல்டிஸ்டிராடா 950S-ன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் தொடங்கி உள்ளது.

புதிய மடலான மல்டிஸ்டிராடா 950S மாடல் இந்தியாவில் நவம்பர் 2ந் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என டுகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாத முதல் வாரத்தில் அதற்கான விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்டிஸ்டிராடா மாடல் டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னை என அனைத்து டுகாட்டி விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.

இதனிடையே, ஆன்லைன் மற்றும் விற்பனை நிலையங்கள் வாயிலாக தனது மல்டிஸ்டிராடா 950எஸ் மாடலின் பிஎஸ்6 வெர்ஷனுக்கான முன்பதிவையும் டுகாட்டி நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950எஸ் மாடலில் 937சிசி டெஸ்டாஸ்டிரெட்டா எல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்ககூடியது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Exit mobile version