டுகாட்டி நிறுவனத்தின் panigale v2 பைக் மாடல் அறிமுகம்..புதுசா என்ன இருக்கு?

டுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த panigale v2 பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுகாட்டி நிறுவனம் BS6 தரச் சான்றிதழுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய panigale v2 பைக்கின் விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக panigale 959 மாடலின் விலை ரூ. 14.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

புதிய டுகாட்டி panigale v2 பைக்கிற்கான முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், முன்பதிவு கட்டணமாக ரூ. 1 லட்சம் என நிர்ணயிக்கபட்டது.

 

டுகாட்டி panigale v2 மாடலின் முன்புற ஃபேரிங், பக்கவாட்டு ஸ்விங் ஆம் ஆகியவை புதியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. புதிய v2 மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களும் டுகாட்டி v4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில், v2 மாடல் பைக்குகள் டுகாட்டி ரெட் மற்றும் வெள்ளை ரோஸோ சிவப்பு எனும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 152.8 பிஹெச்பி பவர், 104 Nm டார்க் செயல்திறன் உடையது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. v2 மாடலின் என்ஜின் செயல்திறன் v4 மாடலை காட்டிலும், கூடுதல் செயல்திறன் கொண்டதாகும்.

டுகாட்டி panigale v2 பைக் ரேஸ், ஸ்போர்ட் மற்றும் ஸ்ட்ரீட் ஆகிய மூன்று ரைட் முறைகளை வழங்குகிறது. இந்த ரைட் முறையை கைப்பிடியில் உள்ள சுவிட்ச் கியரைப் பயன்படுத்தி தேர்வு செய்து கொள்ளலாம்.

Exit mobile version