அடிச்சு தூக்கிய இந்தியர்கள்.. மொத்தமாக காலியான ஸ்கோடா கரோக் மாடல்

ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் மாடல் அமோக வரவேற்புடன், இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது கரோக் மாடலை கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்தது. இது ஒரே வேரியண்டில் கேண்டி வைட், மேஜிக் பிளாக், மேக்னடிக் பிரவுன், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர் மற்றும் குவாட்ஸ் கிரே என ஆறுவித நிறங்களில் விற்பனைக்கு வந்தது.

மேலும், விர்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 9 ஏர் பேக்குகள், பவர் அட்ஜஸ்டபில் ஓட்டுநர் இருக்கை, பனோரமிக் சன்ரூப் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை ரூ.24.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, முதற்கட்டமாக இந்திய சந்தைக்கு 1000 ஸ்கோடா கரோக் யூனிட்கள் கொண்டுவரப்பட்ட்டுள்ளதாக அறிமுக விழாவில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோக் எஸ்யூவி மாடலின் அனைத்து முதற்கட்ட யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்து உள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்விஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஜாக் ஹாலின்ஸ், காம்பேக்ட் பில்ட்-அப் எஸ்யுவிக்கள் இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்ததாக தெரிவித்து இருக்கிறார். 

Exit mobile version