ஹீரோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட்டுள்ளது.
எலெக்ட்ரிக் மோட்டார் வாகன சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு நிறுவனங்களும் புதுப்புது வாகன மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் Nyx-HX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் காம்பி பிரேக் சிட்ஸம், ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங், ஸ்ப்லிட் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தேவைப்படும் சமயங்களில், பின்புற சீட்டை கழற்றி லோடு ஏற்றி செல்லவும் பயன்படுத்தலாம். ஸ்கூட்டரில் ப்ளூடூத் சார்ந்த ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதியம் இடம்பெற்று உள்ளது.
இதில் உள்ள மாட்யூலர் பேட்டரி சிஸ்டம் நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரி ஸ்வாப்பிங் முறையை கொண்டு பயன்பாட்டில் உள்ள பேட்டரியின் சார்ஜ் தீர்ந்து போனால், மற்றொரு பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள, இந்த Nyx-HX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய விலை ரூ. 64,640 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 210 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.