ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்ததின் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடல் பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய சந்தைக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய பைக் மாடலான எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 அறிமுகம் செய்துள்ளது. சுற்றுசுழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் புதிய புகை விதிகளுக்கும் பொருந்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட மாற்றங்களுடன் இந்த பைக் பியல் பேட்லெஸ் வைட் எனும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது. இதுதவிர ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பேந்தர் பிளாக் போன்ற கூடுதல் நிறங்களிலும் சந்தையில் கிடைக்கிறது.
இந்த பைக் மாடலின் விலை ரூ. 1,15,715 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேம்பட்ட பிஎஸ்6 மாடலில் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்ட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த என்ஜின் 17.8 பிஹெச்பி பவர், 16.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்க கூடியது.
பிஎஸ்6 ரக என்ஜின் புதிய நிறம் தவிர ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடலில் வேறு எந்த கூடுதல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.