விற்பனைக்கு வந்த ஹோண்டா ஹைனெஸ்.. அசத்தும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள்

ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 சிசி பைக் ரகங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கால் பெரும் இழப்பை சந்துத்துள்ள, ஆட்டோமொபைல் நிறுவனம் மத்திய அரசின் தளர்வுகளை தொடர்ந்து மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்த சூழலில் ஹோண்டா நிறுவனம் தனது புதிய 350சிசி பைக் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. ஹைனெஸ் எனும் பெயர் கொண்டுள்ள இந்த புதிய மாடல் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு ரகங்களில் சந்தையில் கிடைக்கின்றன.

ரெட்ரோ-ஸ்டைல் வடிவமைப்பை கொண்டிருக்கும் ஹைனெஸ் பைக் வட்ட வடிவ முகப்பு விளக்குகளையும், அகலமான கைப்பிடி அமைப்பை, டியர்டிராப் வடிவ பெட்ரோல் டேன்க், ஒற்றை இருக்கை மற்றும் சாப்டு பென்டர்களை கொண்ட்டுள்ளது.

இத்துடன் புல் எல்இடி முகப்பு விளக்கு, டெயில் லேம்ப், ரிங்-ஸ்டைல் இன்டிகேட்டர்கள், அனலாக் வேகமானி, சிறிய எல்சிடி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கன்சோல் ப்ளூடூத் வசதி கொண்டுள்ளது. மேலும் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், போன் கால் மற்றும் மெசேஜ்களை குரல் வழியே இயக்கும் பல்வேறு அம்சங்களும் இந்த புதிய பைக்கில் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Exit mobile version