ஹோண்டா நிறுவனத்தின் கோனா பேஸ்லிப்ட் கார்.. கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மின்சார கார் மாடல், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுசுழல் மாசுபாட்டை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு, எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலாக, ஹோண்டா நிறுவனத்தின் கோனா மாடல் கார் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் காரின், புதிய பேஸ்லிப்ட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், இந்த காரின் விலை ரூ.23.76 லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடலில் டிசைன் அப்டேட் மற்றும் புதிய அம்சங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோனா பேஸ்லிப்ட் மாடலில் கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மேம்பட்ட பம்ப்பர்கள், 3 பிராக்ஷன் எல்இடி முகப்பு விளக்குகளுடன், கீழ்புறம் அகலமான ஏர் வென்ட்களும் இடம்பெற்று உள்ளன. பக்கவாட்டில், பழைய மாடலில் இருந்து எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், உள்புறம் புதிய வடிவமைப்பும் கொண்டிருக்கின்றன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேஸ்லிப்ட் மாடல் 39.2 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி என இரண்டு தேர்வுகளில் கிடைக்கிறது. இவை முறை 136 பிஹெச்பி மற்றும் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோமீட்டர் மற்றும் 484 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version