ஹோண்டா நிறுவனம் அறிவித்த வருடாந்திர சலுகை.. ரூ.2.5 லட்சம் வரை விலை தள்ளுபடி

ஹோண்டா நிறுவனத்தின் வாகனங்களுக்கு, இந்தியாவில் ரூ. 2.5லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனையில் அதிகபடியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. பண்டிகை காலம் என்பதோடு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாரி வழங்கிய சலுகைகளும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அறிவித்துள்ள வருடாந்திர சலுகையில், அந்நிறுவனத்தின் பல்வேறு வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

அதன்படி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் சிறப்பு மற்றும் பிரத்யேக எடிஷன் ஆகிய இரு மாடல்களுக்கும், ரூ. 12 ஆயிரம் கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதோடு, ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. 

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடல் ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும், ஹோண்டா சிவிக் பெட்ரோல் மாடல் ரூ. 1 லட்சமும், டீசல் மாடல் ரூ. 2.50 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுவதக்கவும், ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version