ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் காரில், சன்ரூப் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் நவம்பர் 5ம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. முந்தைய மாடல்களை போன்றே ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடலிலும் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற உள்ளன.
இதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு தளங்களிலும் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், அதற்கான விலை ரூ.21 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை ஐ20 மாடல் பெற்றுள்ளது. மேலும், புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக ஹோண்டா ஜாஸ் மாடலிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சன்ரூப் வசதியை பெறும் இரண்டாவது மாடலாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 வடிவமைக்கப்பட்டு உள்ளது.
புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் வகையிலும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற வகையிலும் கிடைக்கிறது.