கவாசகி நிறுவனம் தனது புதிய 2020 வல்கன் எஸ் BS6 ரக பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
கவாசகி நிறுவனத்தின் புதிய வல்கன் எஸ் ரக பைக்கின் விலை இந்தியாவில், ரூ. 5.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வல்கன் எஸ் ரக பைக்கில் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே ஓவல் வடிவ முகப்பு விளக்கி, ஸ்ப்லிட் சீட் மற்றும் ஸ்வூபிங் ரியர் பென்டர் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, புதிய மெட்டாலிக் பிளாட் ரா கிரேஸ்டோன் நிறத்திலும் இந்த பைக் சந்தையில் கிடைக்கிறது.
ககவாசகி வல்கன் எஸ் மாடலில் 649 சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. முந்தைய பிஎஸ்4 மாடலில் 59.5 பிஹெச்பி பவர், 63Nm டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹேன்டிள்பார், தீட், ஃபூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றார்போல் வைத்துக் கொள்ள முடியும். சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.