பைக் மாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை விலை தள்ளுபடி – கவாசகி மோட்டார்ஸ் அறிவிப்பு

கவாசகி நிறுவனத்தின் பைக் மாடல்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டு இறுதியை முன்னிட்டு வாகன விற்பனையை லாபகரமாக முடிக்கும் நோக்கில், பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பைக் மாடல்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகை அறிவித்து உள்ளனர். இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை, ஸ்டாக் இருப்பிற்கு ஏற்ப அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும் இந்த சலுகையை, ரொக்க வடிவில் தள்ளுபடியாக பெறலாம். அதன்படி, வல்கன் எஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம், இசட்650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று, கவாசகி டபிள்யூ800 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கவாசகி கேஎல்எக்ஸ் 110 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 140 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம், கேஎக்ஸ் 100 மாடல் ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இந்த சலுகைகள் கவாசகி ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு காம்படீஷன் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Exit mobile version