கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களின் விலையில் மாற்றம்

இந்தியாவில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவன பைக் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனை விலையில் பெரிய மடம் ஏதும் செய்யாமலேயே இருந்தன. இந்நிலையில், தற்போது கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு உள்ளது. இரு நிறுவன மாடல்களின் விலையும் முறையே ரூ. 1,200 மற்றும் ரூ. 8,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேசமயம், கேடிஎம் 125 டியூக் மற்றும் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மாடல்களின் விலை 1,790 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் விலை தற்சமயம் 1.86 லட்சம் ரூபாய், எக்ஸ்-ஷோரூம் முதல் தொடங்குகிறது.

கேடிஎம் டியூக் 250 மாடலின் விலை 4,738 ருபாய் வரை உயர்த்தப்பட்டு 2.14 லட்சம் ரூபாய், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆர்சி 390 மாடல் விலை 3,539 ரூபாய் அதிகரித்து தற்சமயம் 2.56 லட்சம் ருபாய், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

கேடிஎம் ஆர்சி 125 மாடல் விலையில் ரூ. 1279 உயர்த்தப்பட்டு தற்சமயம் 1.61 லட்சம் ரூபாய், எக்ஸ்-ஷோரூம் என மாற்றப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 390 டியூக் மாடலின் விலை 8,517 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்சமயம் 2.66 லட்சம் ரூபாய், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Exit mobile version