அட்டகாசமான அப்டேட்களுடன் களமிறங்கிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி..

லேண்ட் ரோவர் நிறுவனம் சிறப்பான பல்வேறு அப்டேட்களை உள்ளடக்கிய, புதிய டிஸ்கவரி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களின், வாகன வெளியீடு ஒத்துவைக்கப்பட்டு இருந்தது. தளர்வுகளை தொடர்ந்து, பல நிறுவணங்களும் தங்களது புதிய மாடல் கார்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி மாடல் கார் தற்போது சர்வதேச சந்தையில்
அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 2021 மாடல் கார் பல்வேறு புதிய சிறப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.75.59 லட்சம் முதல் ரூ.87.99 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய டிஸ்கவரி மாடலில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் 300 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மாடல் காரும் வழங்கப்படுகிறது. இது 360 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் இதுவரை இல்லாத அளவிற்கு, பயணிகளுக்கு மிகவும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் புதிய மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய கிரில் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் எஸ், எஸ்இ, ஹெச்எஸ்இ மற்றும் ஆர் டைனமிக் என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இதன் ஆர் டைனமிக் மாடல் பல்வேறு ஸ்போர்டி அம்சங்களுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version