மஹிந்திரா நிறுவனத்தின் ரூ.3 லட்சம் வரையிலான சலுகை.. கார் மாடல்களின் விவரங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்குப் பிறகு ஆட்டோமொபைல் துறை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. ரெனால்ட், மாருதி போன்ற நிறுவனங்களும் கூட, விழாக்காலத்தை 1 லட்ச ரூபாய் வரையிலான சலுகைகளை அறிவித்தன.

அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனமும் தனது கார் மாடல்களுக்கு, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சலுகைகள் அறிவித்துள்ளது. நாடு முழுக்க சில விற்பனையாளர்கள் இந்த சலுகைகளை அறிவித்துள்ளன. தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி எக்சேன்ஜ் போனஸ் மற்றும் அக்சஸரீக்கள் வடிவில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

மஹிந்திரா எக்ஸ்யுவி300 பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகையும், எக்ஸ்யுவி500 மாடலின் டபிள்யூ5 மற்றும் டபிள்யூ7 வேரியண்ட்களுக்கு ரூ. 24 ஆயிரமும், டபிள்யூ9 மற்றும் டபிள்யூ11 வேரியண்ட்களுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. 

ஸ்கார்பியோ எஸ்5 வேரியண்ட்டிற்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடியும், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 2.20 லட்சம் வரையிலான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மராசோ மாடலுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எம்2 வேரியண்ட்டிற்கு ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

Exit mobile version