எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நவம்பர் மாதத்தில் விழாக்காலத்தை முன்னிட்டு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளைய, விலை தள்ளுபடிகளையும் முண்டியடித்துக் கொண்டு அறிவித்தன. அதற்கேற்றவாறு, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், நடப்பாண்டில் கடந்த மாதத்தில் தான் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்தன.
இந்நிலையில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது, கிறிஸ்துமஸ் சர்பிரைஸ் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விசேஷ சலுகை, தள்ளுபடி பலன்கள் போன்றவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் தனது வாடிக்கையாளர்கள் எக்ஸ்பீரியன்ஸ் திட்டத்தை மேம்படுத்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய கார்களுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெற முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பைபேக் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் தங்களின் வாகனத்தை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையில் திரும்ப கொடுக்கும் திட்டத்தையும் எம்ஜி மோட்டார் முன்னெடுத்துள்ளது.
இந்த சலுகைகள் எம்ஜி ஹெக்டார், ஹெக்டார் பிளஸ் மற்றும் இசட்எஸ் இவி மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இவை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்றவாரு வழங்கப்படும் என, எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.